சனி, 5 டிசம்பர், 2009
நாட்டில் சாதாரண நீதிகூட நடைமுறைச் சாத்தியமாக்கப் படவில்லை -இரா.சம்பந்தன்!!
1978ல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பும் அதனூடாக உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மட்டுமல்ல முழுநாட்டுக்குமே ஆபத்தையும், அழிவையும் ஏற்படுத்தி விட்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன், நாட்டில் சாதாரண நீதிகூட நடைமுறைச் சாத்தியமாக்கப்படவில்லை எனவும் இன்று காணப்படுவது குழம்பிப்போனதொரு அரசியல் கலாசாரமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் நினைவையொட்டி ஜனநாயக தலைமைத்துவ நிறுவனமும், பிரட்ரிக் நோமன் மன்றமும் இணைந்து கொழும்பு டீன்ஸ் வீதியிலுள்ள பூக்கர் ரெட்ஸ் மண்டபத்தில் நடத்திய பகிரங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோதே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக