செவ்வாய், 29 டிசம்பர், 2009
வடமாகாணத்திலிருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களது காணிகளில் வேறு யாரையும் குடியமர்த்த மாட்டோம். -ஜனாதிபதி..!!
வடமாகானத்திளிருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களது காணிகளில் வேறு யாரையும் குடியமர்த்த மாட்டோம். அக்காணிகளில் பலாத்காரமாக யாரையும்; ஆக்கிரமிப்பு செய்ய விடவும் மாட்டோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்;த ராஜபக்ஷ வடமாகாண முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணில் மீளக்குடியமரும் நாள் வெகு தொலைவில இல்லை என்றும் கூறினார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு சனிக்கிழமை புத்தளம் ஆலங்குடா விளையாட்டு மைதானத்தில்; கட்சியின் தேசிய தலைரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது. வடமாகாணத்தை சேர்ந்த 25 ஆயிரத்தக்கும் அதிகமான பொதுமக்கள் இம்மாநாட்டுக்கு நாட்டின் நாலா பாகங்களிலும் வருகைத்திருந்தனர். மேலும் ஜனாதிபதி பேசுகையில் கூறியதாவது வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த 3 இலட்சம் மக்களை பராமரிப்பு செய்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்.அதே போன்று 19 வருட காலமாக வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வாழும் வடமாகாண முஸ்லிம்களையும் பராமரிக்கின்றவரும் அவராகத் தான் இருக்கின்றது. அவர் நேர்மையான செயற் திறமை படைத்த ஒருவர்.இன்று எமது மக்களுக்காக எந்த பணிகளை செய்தாலும்,எதிர்கட்சி அதற்கு எதிராக பொய் பிரசாரங்களையே செய்து வருகின்றன. நான் ஜனாதிபதியாக வந்தால் பாங்கு சொல்ல விடமாட்டேன் என்று கூறினார்கள், ஆனால் முஸ்லிம்கள் நம்பவில்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு எனக்கு வாக்களித்தார்கள் முஸ்லிம்கள். இன்று இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு ஜந்து தடவைகள் பாங்கு சொல்ல வைத்தது யார்.வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் நீங்கள் உங்களது சுய விருப்பத்தின் பேரில் இடம் பெயர்ந்தாக ரவ+ப் ஹக்கீம் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த போது கூறினார். இது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் அநியாயம். இலங்கைக்குள் அகதிகளாக வாழும்; துன்பியல் வாழ்வு.உங்களது பிரச்சினைகளை நான் நன்கறிவேன், அதனால் தான் யாரும் உங்களைப்பற்றி பேசாமல் இருந்த போது நான் ஜக்கிய நாடுகள் சபையில் உங்களுக்காக பேசினேன், அதே போல் எனது மஹிந்த சிந்தனையில் உங்களது பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் கூறியுள்ளேன்.இன்று உங்கள் மத்தியில் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் காட்டும் பாசம் எனக்கு சந்தோசம் தருகின்றது.நீங்கள் எனது தோழன், நீங்கள் என்னை நம்பலாம், நான் உங்களை முழுமையாக நம்புகின்றேன், இன்று பயம், அச்சம், சந்தேகம் என்பவைகள் இல்லை எல்லோரும் ஓரே தேசத்து மக்கள். எல்லோருக்கும் உள்ள அனைத்து உரிமைகளும் சமமாக உங்களுக்கும் உரித்தானது என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக