செவ்வாய், 29 டிசம்பர், 2009

கனேடிய கடற்பரப்பில் கப்பலில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களில் 50பேரை விடுவிக்க நடவடிக்கை..!!

கனடா கடற்பரப்புக்குள் அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு கப்பலுடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளில் 50பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக அவர்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் வசித்துவரும் இவர்களது குடும்ப அங்கத்தவர்களுடன் வாழ்வதற்கு இவர்கள் அனுமதிக்கப்படுவரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல அகதிகள்பற்றி விசாரணைசெய்து அவர்களது எதிர்காலம் பற்றி தீர்மானிப்பதற்கு கனடா குடிவரவு அதிகாரிகள் தற்போதைய விடுமுறை நாட்களில் தொடர்ச்சியாக கடமையாற்றி வருகிறார்கள். இறுதியில் கடும் நிபந்தனைகளுடன் அகதிகள் விடுவிக்கப்படுவார்கள். ஓசியன் லேடி படகு கனடிய கடற்பரப்பில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அதிலிருந்த இலங்கைத் தமிழ்அகதிகள் கப்பலுடன் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 23பேர் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளது. ஏனைய சுமார் 25பேர்மீதான விசாரணைகள் அடுத்தமாதம் முடிவடைந்துவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக