சனி, 28 நவம்பர், 2009
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க (புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்துத் தெரிவிக்கையில், எங்களைப் பொறுத்தமட்டில் இரண்டு விடயங்கள் அடிப்படையாக அதாவது ஒன்று இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றுதல், அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினை அதாவது அதிகாரப்பகிர்வு, அரசியல் பிரச்சினைக்கான ஒரு தீர்வு. இந்த மக்கள் மீள்குடியேற்றுவது சம்பந்தமாக ஜனாதிபதி எமக்கு உறுதிமொழியைத் தந்திருக்கிறார். எப்போதெல்லாம் அந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கு வசதிகள் வருகின்றதோ அப்போதெல்லாம் ஆரம்பிப்பேன் என்றுகூறி அந்த வேலைத்திட்டங்களும் ஆரம்பித்திருக்கின்றன. மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு வந்ததையிட்டு திருப்தியாக இருக்கின்றார்கள். நிச்சயமாக தன்னுடைய அடுத்த தவணையிலே இதற்கான முழுமையான முயற்சிகளை எடுத்து ஒரு நிரந்தரத் தீர்வையும் தான் வழங்குவேன் என்று மகிந்த ராஜபக்ச அவர்கள் எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இந்த நிகழ்வுகளைக் குழப்பிவிடக்கூடாது. அது சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டுமென்பது எங்களுடைய விருப்பம். அதன் காரணமாக நாங்கள் ஜனாதிபதி அவர்களை ஆதரிக்கின்றோம். தமிழ் மக்களும் நாம் கூறிய விடயங்களைக் கிரகித்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக