ஞாயிறு, 1 நவம்பர், 2009
முன்னாள் புலி உறுப்பினர்கள் 1000 பேருக்கு USAID நிறுவனத்தின் உதவியுடன் தொழில்பயிற்சி.
யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னாள் புலி உறுப்பினர்கள் 1000 பேருக்கு புனருத்தாபனம் அளிக்கும் பெரும் செயற்திட்டம் ஒன்று நேற்று ஆரம்பமானது. அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களைச் சேர்ந்த 1000 முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்வதற்கான தொழில் பயிற்சிகள் வழங்க ஏற்பாடாகியுள்ளதுடன், எதிர்காலத்தில் அவர்கள் தாம் கற்கும் துறையில் வேலை செய்வதற்குரிய உபகரணங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுக்கின்றது. International Organization for Migration (IOM)எனும் நிறுவனத்தின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ள இவ்வேலைத்திட்டம் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக