சனி, 3 அக்டோபர், 2009

இலங்கை தூதரகத்தில் அத்துமீறல்: பூந்தொட்டிகளை உடைத்து ரகளை

டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், அத்துமீறி நுழைந்த புதிய தமிழகம் கட்சியினர் அங்கு கல்வீசி தாக்கியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியினர், நேற்று டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதன்பின், மதியம் 2.30 அளவில், டில்லி சாணக் கியபுரி பகுதியில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு வாகனங்களில் வந்த அந்தக் கட்சியினரில் ஒரு பிரிவினர், அங்கு கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத் துச் சேதப்படுத்தினர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இவர்கள் நடத்திய கல்வீச்சில் தூதரக அலுவலகத்தின் கண்ணாடிகள் சில சேதம் அடைந்தன. ஒரு சில நிமிடங்களில், தாங்கள் வந்த வாகனங்களில் ஏறிச் சென்றனர். அதற்குப் பின் தான் போலீசார் வந்தனர். தூதரக அலுவலகத்திற்குள் புகுந்து, தன் கட்சியினர் தாக்குதல் நடத்திய போது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியே ஒரு காரில் இருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது. அதற் காக, கடும் வருத்தம் தெரிவிக்கிறோம்' என, வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். "போலீசார் அங்கு குவிக் கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக