புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறும் ஒருங்கிணையக் கூடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் உண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் உதவியுடன் அவர்கள் ஆயுதங்களைப் பெறுவதற்கும் நிறையச் சாத்தியம் உண்டு. இது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எச்சரித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற மாநிலங்களின் பொலிஸ் உயர்அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அங்கு தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது, புலிகளுக்கான பெருமளவு நிதியை வழங்கி வந்தவர்கள் உலகெங்கும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்கள். புலிகள் புத்துயிர்பெற்று மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்கமுடியாது. புலிகளுக்கான நிதி வழங்கல் வழிகள் இன்னும் யாராலும் தொடப்படாமல் அப்படியே உள்ளன. உலகெங்கும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் மனக்குறையுடன் இருக்கக்கூடிய சிலர், புலிகள் என்ற பயங்கரவாதக் குழு மீண்டும் ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் உதவி செய்வதற்காக ஒருங்கிணையக்கூடும். புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளுக்கு பெருமளவு பணத்தைக் கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய உதவியைப் பயன்படுத்தி புலிகள் மீண்டும் புத்துயிர்பெற முயற்சிக்கலாம். புலிகளின் நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் பாதிப்படையாமலுள்ளன. புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மீண்டும் புலிகள் ஆயுதங்களைத் தூக்குவதற்கு உதவலாம். இதுகுறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அத்துடன், எதனையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதாவது இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக