திங்கள், 21 செப்டம்பர், 2009

வெளிவிவகார அமைச்சரை பதவி நீக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை!!

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை பதவி நீக்குமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் ரோஹித்த போகொல்லாகம குறித்த பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனவும் அவருக்கப் பதிலாக வேறு ஒரு நபரை பணிக்கு அமர்த்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றங்களின் போது வெளிவிவகார அமைச்;சுப் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது இதன்படி அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன வெளிவிவகார அமைச்சுப்பொறுப்பிற்கு மிலிந்த மொரகொட மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன எனினும் யாரை வெளிவிவகார அமைச்சராக தெரிவுசெய்வது என்பது என்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக