வெள்ளி, 18 செப்டம்பர், 2009
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்குமென இந்தியப் பிரதமர் தெரிவிப்பு-
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்குமென இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கி;ற்கு எழுதப்பட்ட கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே மன்மோகன்சிங் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், அத்துடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காகவும், மக்களின் புனர்வாழ்வுப் பணிகளுக்காகவும் இந்தியா அனைத்து நிவாரண உதவிகளையும் மேற்கொள்ளுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக