வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சனல் 4 வீடியோ காட்சியின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவிப்பு-


பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இலங்கை இராணுவம் தொடர்பிலான சர்ச்சைக்குரிய காட்சிகளின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையம் அறிவித்துள்ளது. இந்த மூலப்பிரதியில் தமிழ்மொழியில் சம்பாஷணைகள் இடம்பெறுவதாகவும் மத்தியநிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காட்சிகள் திறந்தவெளிப் பிரதேசமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக