புதன், 23 செப்டம்பர், 2009
உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் நளினி!
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நளினி, தன்னை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருந்துவந்த நிலையில் வேலூர் மகளிர் சிறையதிகாரி ஜெயபாரதி அளித்த உறுதிமொழியின் பேரில் அவர் இன்றுகாலை உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார். நளினி விடுதலை குறித்து ஆராய அரசு கமிட்டி ஒன்று அமைத்திருந்தது. இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். வேலூர் பெண்கள் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயபாரதி, நளினிக்கு அளித்த உறுதியின்பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார். அதேபோன்று, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபர்ட் பயஸ் நேற்றிரவு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார். இவர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக