வெள்ளி, 18 செப்டம்பர், 2009
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் ஆறு சுகாதார நிலையங்கள் திறந்து வைப்பு
வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஆறு சுகாதார நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. வலயம் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு ஆகிய நிவாரணக் கிராமங்களில் இந்த சுகாதார நிலையங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறார்கள் மற்றும் தாய்மாரின் சுகாதாரப் போசாக்கு நலன்குறித்த பணிகளை இதன்மூலம் மேம்படுத்த முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியினை ஐ.நா சனத்தொகை நிதியம் வழங்க முன்வந்துள்ளது. இந்தவகையில் ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா 50லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக