வியாழன், 17 செப்டம்பர், 2009

பங்களாதேசில் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாததால் 13வயது மகளை 75வயது தாத்தாவுக்குத் திருமணம்..!

வாங்கிய கடனைக் கொடுக்க முடியாததால் 13 வயது மகளை 75 வயது தாத்தாவுக்கு திருமணம் செயு;து கொடுத்தவர் பங்களாதேஷைச் சேர்ந்த அஜார் பேபாரி இவருக்கு 13 வயதில் அகினுர் என்ற மகள் உட்பட 2மகள்களும் 2மகன்களும் இருக்கிறார்கள் வறுமையில் வாடும் அஜார் செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார் இந்த நிலையில் கடந்த மே மாதம் அய்லா புயல் தாக்கியது அப்போது வீடு இடிந்து அதை சீர் செய்ய பணம் இல்லாத நிலையில் வீட்டைப் பழுது பார்ப்பதற்காக அவர் கிராமத்திலுள்ள வட்டிக்கடைகாரர் லொக்மர் சித்தரிடம் 3000 ரூபா கடன் வாங்கினார் ஆனால் இந்தப் பணத்தை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை வட்டியையும் கட்ட முடியவில்லை கடன்கொடுத்த லோக்மன் சிக்தர் உடனடியாக பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது 13 வயது மகள் அகினுவை எனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார் பணம் இல்லாததால் பணத்தை திருப்பி செலுத்த வேறு வழிதெரியாததால் 75வயதான வட்டிக்கடைக்காரர் லோக்மனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்க அகினுவின் தந்தை சம்மதித்துள்ளார். இதை அறிந்த லோக்மனின் மனைவி ஆயிஷாபீவி இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக