ஞாயிறு, 24 மே, 2015

தாய்லாந்து - மலேசிய எல்லையில் பெருமளவு புதைகுழிகள்.!

தாய்லாந்துடனான மலேசியாவின் எல்லைப் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட முகாம்களுக்கு அருகே பெருமளவு புதைகுழிகளை கண்டுபிடித்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதைகுழிகளில் காணப்பட்ட குறைந்தது நூறு சடலங்களும் மியன்மார் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்த குடியேறிகளுடையதாக இருக்கலாம் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த கடத்தல் முகாம்கள் ஐந்து ஆண்டுகளாக அங்கு இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக மலேசியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மாதத்தின் முற்பகுதியில், தாய்லாந்தின் தெற்குப் பகுதியிலும் குடியேறிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இதேவிதமான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக