ஞாயிறு, 24 மே, 2015

இலங்கையில் 3000 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர்.!

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
15 வயதிற்குட்பட்ட 75 சிறுவர்கள் உள்ளிட்ட 3000 பேர் வரை எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சின் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களே அதிகளவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட எச்.ஐ.வி பரிசோதனைகளில் 22, 059 பேர் பங்குபற்றியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 12 ,434 ஆண்களும் 9,625 பெண்களும் பங்குபற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக