ஞாயிறு, 4 ஜனவரி, 2015

கூட்டமைப்பின் கோட்டைகளில் மஹிந்தவுக்கு ஆதரவாக தமிழ் பெண்கள் பிரசாரம்.!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் பெண்கள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளில் இந்த பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, நொச்சிமுனை பிரதேசங்களில் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வீடு வீடாகச் ஜனாதிபதிக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சங்க கூட்டமைப்பின் தலைவி செல்வி மனோகரர் உட்பட பல மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் இணைந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக