திங்கள், 22 டிசம்பர், 2014

மஹிந்த சிந்தனையின் மூலம் கடன் சுமை மட்டுமே எஞ்சியுள்ளது சாந்தனி பண்டார..!!

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் மூலம் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமை மட்டுமே எஞ்சியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டம் ஓர் ஆச்சரியமான எண்ணக்கருவாகவே ஆளும் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனினும். உண்மையிலேயே மஹிந்த சிந்தனை காரணமாக ஆசியாவின் பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியுள்ளது.

அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகையின் அளவு எவ்வளவு என்றல் பிறந்த குழந்தைகள் மட்டுமன்றி பிறக்க இருக்கும் குழந்தைகளும் தலா நான்கு லட்ச ரூபா கடனாளியாகியுள்ளது.


பெற்றுக்கொண்டுள்ள கடன் அடைக்க வருடாந்த வருமானம் போதுமானதல்ல.

இவ்வாறு கடன் சுமை அதிகரித்தால் நாட்டை மீட்க முடியாத நிலைமை ஏற்படக்கூடும்.

இவை தொடர்பில் யதார்த்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

யாருடைய பெயரையும் மேலே கொண்டு வரவோ யாருடைய பெயரையும் அழிக்கவோ நாம் விரும்பவில்லை.

எமது தாய் நாட்டை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம் என சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று அனுராதபுரத்தில் உள்ள காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக