
போர்க்குற்ற சாட்சியங்களுக்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் வவுனியாவில் வைத்து கிருஷ்ண ராஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரை விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் ராத் ஹுசைன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எனினும் அரசாங்கம் அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளது.
கிருஷ்ணராஜாவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக