சனி, 22 நவம்பர், 2014

பிரதியமைச்சுப் பதவியை துறக்கிறார் திகாம்பரம்! ஐ.தே.க.வில் சங்கமம்?

தேசிய நல்லிணக்க அலுவல்கள் பிரதியமைச்சர் பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை நள்ளிரவை அண்மித்த நேரத்தில் ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை
பெரும்பாலும் சனிக்கிழமை ஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது.

பிரதியமைச்சர் திகாம்பரத்தின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை வெள்ளிக்கிழமை மாலையில் ஆளுங்கட்சியை விட்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக