செவ்வாய், 18 நவம்பர், 2014

தனியாக தீர்மானம் எடுக்க முடியாது ரணில் விக்ரமசிங்க ..!!

பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாப்பிற்கு அமைய செயற்குழுவினை கூட்டி வேட்பாளர் தெரிவு பற்றி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரியவை நியமிக்குமாறு தேசிய பிக்குகள் முன்னணியின் ஆலோசகர் கிராம்பே ஆனந்த தேரர் நேற்று ரணிலை சந்தித்து கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் வேட்பாளர் பற்றி பேசுவதனை விடவும் தேர்தலை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர் தொடர்பான பரிந்துரைகள் கட்சியின் செயற்குழுவில் வைத்து ஆராயப்படும்.



யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து தனியான தீர்மானம் எடுக்க முடியாது.

தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக நான் வெளிநாடு செல்கின்றேன்.

எனது வெளிநாட்டுப் பயணத்தின் போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் கட்சியின் செயற்குழு வேட்பாளர் தெரிவு தொடர்பில் கூடி ஆராயும்.

செயற்குழுவின் தீர்மானத்திற்கு ஏற்பவே பொது வேட்பாளர் நிர்ணயிக்கப்படுவார் என ரணில் விக்ரமசிங்க, கிராம்பே ஆனந்த தேரரிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக