மீளமைப்பு செய்யப்பட்ட 2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.நேற்று மாலை இந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி சிங்கள மொழி மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் 163 ல் இருந்து 157 ஆகவும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான புள்ளிகள் 159 ல் இருந்து 152 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன
இதன் காரணமாக புலமைப்பரிசில் நிதியத்துக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரிக்கும் என்று வரவுசெலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக