செவ்வாய், 18 நவம்பர், 2014

நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானம் இன்று பொதுமக்களுக்கு அறிவிப்போம் ஜாதிக ஹெல உறுமய..!!

அரசாங்கத்தில் பங்காளியாக தொடர்ந்தும் இருப்பதா? அல்லது விலகிச் செல்வதா? என்பது தொடர்பில் நாட்;டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழு தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்ää அரசியலமைப்பில் மாற்றங்களை செய்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து சுயாதீன தேர்தல் ஒன்றை நடத்தவேண்டும் என்று அந்தக்கட்சி கோரி வருகிறது.

எனினும் அரசாங்கம் அதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் காலஅவகாசத்தை கோரியிருந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை 6.மணி முதல் இரவு 9 மணி வரை கூடிய ஜாதிக ஹெல உறுமயவின் மத்தியகுழு நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இந்த முடிவு இன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக