உயர்கல்வி அமைச்சர் மாணவர்களை மிருகங்களாகவே பார்க்கின்றார் என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.உயர்கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை மிருகங்களாகவும், பல்கலைக்கழகங்களை கட்சிக் காரியாலயங்களாகவுமே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கருதுகின்றார்.
இலங்கை வரலாற்றில் இந்த அமைச்சரின் காலத்தினைப் போன்று பலகலைக்கழகங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதில்லை.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையி;ன் 17 பல்கலைக்கழகங்களுக்கும் 159 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி கல்லூரிக்கு மட்டும் 138 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் நியாயத் தன்மை எமக்குப் புரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக