வியாழன், 9 அக்டோபர், 2014

ப்ரீஜெயக்குமாரி அமைப்பின் ஏற்பாட்டாளர் மீது தாக்குதல்..!!!

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் ஜி தேவராஜா நேற்று மாலை 6 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டார்.
நெடுங்கேணியில் உள்ள தமது கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ப்ரீஜெயக்குமாரி அமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 10ம் திகதியன்று வவுனியாவில் நடைபெறவுள்ள கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி என்ற பெண்ணை விடுதலை செய்யக்கோரும் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்னரே அவர் தமது கடைக்கு சென்றார்.


இந்தநிலையில் அவர் கடையில் இருந்து திரும்பும் போது இரண்டு மோட்டார் சைக்களில் வந்தவர்கள் அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது தாம் கொலை செய்வோம் என்று தேவராஜாவை தாக்குதல் நடத்தியவர்கள் மிரட்டியுள்ளனர்.

இந்தநிலையில் அவர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக