
தேசிய தேர்தல் ஒன்று தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு சவாலை விடுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக போட்டியிட்டாலும் தமக்கு பிரச்சினையில்லை.
தாம் ஜனாதிபதி தேர்தலில் வெல்லப் போவது உறுதி என்ற தோரணையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சவாலை விடுத்துள்ளது.
இந்தநிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேர்தலுக்கு தயாராகிவருவதாக அமைச்சர் கூறினார்.
எனினும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அவர் கூறவில்லை.
அதனை ஜனாதிபதி அல்ல. தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார் என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
இலங்கையை ஜனாதிபதி தலைமையிலான கட்சியே பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக