வியாழன், 9 அக்டோபர், 2014

வெளிநாட்டு புலி உறுப்பினர்கள் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சி துணை பாதுகாப்புச் செயலாளர்...!!

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சிப்பதாக துணை பாதுகாப்புச் செயலாளர் சசிகலா பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயற்குழு அமர்வுகளின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புலிச் செயற்பாட்டாளர்களுக்கு ஐரோப்பாவிலிருந்து பணம் கிடைக்கின்றது.

இதனால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.

இதன் காரணமாகவே அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை தொடர்ந்தும் அமுல்படுத்தி வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை அரசங்கத்திற்கும், படையினருக்கும் எதிரக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக