வியாழன், 9 அக்டோபர், 2014

வட மாகாண சபையை புறக்கணித்த மஹிந்த முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு...!!!

வடக்கில் ஜனநாயகம் கிடையாது என அந்த மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இரண்டு அமெரிக்க ராஜதந்திரிகளுடன் இன்று நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஜனநாயகம் கிடையாது, வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் பணத்தையோ அதிகாரங்களையோ வழங்கவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயம் தொடர்பில் வட மாகாணசபையின் எந்தவொரு உதவியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

இதன் மூலம் ஜனாதிபதியிடம் ஜனநாயகம் கிடையாது என்பது வெளியாகியுள்ளது என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இருவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக