செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஐ.தே.கவின் பிரதித் தலைவராக சஜித் நியமனம்!!


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சியின் உதவித் தலைவராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக அண்மையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில்
போட்டியிட்ட ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாளராக எரான் விக்ரமரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் ரஞ்சித் மத்துமபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டிருந்தார்.

கட்சியின் தேர்தல் செயலாளராக தலதா அதுகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக