செவ்வாய், 16 செப்டம்பர், 2014

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் குறைப்பு - மகிந்த அதிரடி முடிவு!!


பெற்றோல், மண்எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் என்பன குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, சீன ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்
விலையும் மின்சார கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி பெற்றோல் லீற்றருக்கு 5 ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 20 ரூபாவாலும், டீசல் லீற்றருக்கு 3 ரூபாவாலும் விலை குறைக்கப்படவுள்ளது. அத்துடன் மின்சார கட்டணம் 25% குறைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக