சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த அவர், இலங்கையில்
தங்கியிருக்கும் போது பல்வேறு அபிவிருத்தி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. சீன ஜனாதிபதியுடன் அவரது பாரியாரும் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக