வியாழன், 25 செப்டம்பர், 2014

ஐ.தே.கவினர் சிறைச்சாலைகளை பார்வையிட தீர்மானம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சிறைச்சாலைகளைப் பார்வையிட உள்ளனர்.
சிறைச்சாலைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறியும் நோக்கில் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிறைச்சாலைகளை பார்வையிடவுள்ளனர்.

எதிர்வரும் வாரத்தில் ஓர் நாளில் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

எந்தெந்த சிறைச்சாலை எப்போது என்ற விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட சென்ற போது ஐக்கிய தேசியக் கட்சியினர் கடுமையான எதிர்ப்பை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக