முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இராணுவம் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கருதி அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் செயல் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
சில அரசியல்வாதிகள், போருக்கு பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளை
தேவையற்ற வகையில் சித்தரித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பி;ட்டுள்ளது.
நாடு இன்று இராணுவத்தின் கைகளுக்கு போய் விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சந்திரிகா அண்மையில் தெரிவித்திருந்தார்.
பொதுமக்களின் வாழ்க்கையில் இராணுவம் தலையிடுவதாக கூறியே இந்த அச்சத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
இன்று வீதிகளை சுத்தப்படுத்தல் முதல்ää பாதையமைப்பு மற்றும் காண்களை சுத்தப்படுத்தல் போன்ற பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அத்துடன் தமது வீடுகளை ஒட்டுப்பார்ப்பதாகவும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும் சந்திரிகா தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு அமைச்சு இலங்கை தமிழரசுக்கட்சி வடக்குகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேறக்கோரும் நடவடிக்கை போன்றே சந்திரிகாவின் கருத்தும் அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக