இந்தியத் துணைத்தூதரகத்தின் அனுசரணையுடள் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியினால் ஆற்றுகை செய்யப்படும் மாபெரும் நடன நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வவுனியா நகரசபை புதிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கலாநிதி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் கௌரவ விருந்தினராக இந்தியப் பிரதித் துணைத்தூதுவர் சு.தண்சணாமூர்த்தியும் சிறப்பு விருந்தினர்களாக
வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மோகநாதன், வவுனியா பிரதேச செயலர் கா.உதயராசா, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செ.அன்ரன் சோமராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் 100 மாணவர்கள் வரை இந்த கலை நிகழ்வில் நடன அளிக்கை செய்தனர். இந்த நிகழ்வில் கலை ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக