வியாழன், 18 செப்டம்பர், 2014

கொள்ளுப்பிட்டி விபச்சார விடுதிக்கு, தேசிய கிரிக்கட் வீரர்கள் வழமையான வாடிக்கையாளர்கள்!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த விபச்சார விடுதிக்கு இலங்கையின் தேசிய கிரிக்கட் வீரர்கள் சிலர் வழமையான வாடிக்கையாளர்களாக வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை ஊடக மாநாட்டில் வைத்து தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை
முற்றுகையிடப்பட்டது.

இதன்போது தாய்லாந்து பெண்கள் உட்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கையின் கிரிக்கட்டின் அண்மைக்காலமாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன.

இந்தநிலையிலேயே பொலிஸ் பேச்சாளரின் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக