செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

ரணில் மற்றும் சந்திரிக்காவை விடவும் சம்பந்தனுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை....!!!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மூன்று தலைவர்களும்ää இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் வெளியிட்டிருந்தனர்.

எனினும், முதலாவது சந்தர்ப்பம் இரா.சம்பந்தனுக்கு கிடைத்துள்ளது.

சம்பந்தன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சம்பந்தன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நாளை மறுதினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 4ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த திட்டம கைவிடப்பட்டது.

சந்திப்பு நடாத்த பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் நேரத்தை ஒதுக்காமையே விஜயம் ஒத்தி வைக்கப்பட்டமைக்கான காரணம் என சில ஊடகங்கள் செயதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக