செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் அணிவதற்கு பிக்கு மாணவர் எதிர்ப்பு....!!!!

உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு மனித உரிமை ஆணைக்குழுவிடம் சில பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதனால் ஏனைய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பௌத்த பிக்குவான தேவகிரியே சந்திசேவர தேரர் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவது மெய்யான பரீட்சார்த்தியா அல்லது அவரின் சார்பில் வேறும் யாருமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கக் கூடாது.


நான் பரீட்சைக்குத் தோற்றிய பொரளை பரீட்சை நிலையமொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றினர்.

இது குறித்து பரீட்சை நிலையப் பொறுப்பாளரிடம் முறைப்பாடு செய்தேன். தேவையென்றால் பரீட்சார்த்தியின் அடையாளத்தை நிரூபிக்க ஹிஜாப்பை கழற்றிப் பார்க்க முடியும் என பொறுப்பாளர் தெரிவித்தார்.

எனினும், பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவியருக்கு மட்டும் விசேட சலுகை வழங்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சந்திசேவர தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக