வியாழன், 21 ஆகஸ்ட், 2014

சிவாஜிலிங்கத்தின் பிரேரணைக்கு விசே கூட்டம் கூட சபையில் தீர்மானம்!!



வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் 14 ஆவது அமர்வில் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் விசேட கூட்டம் ஒன்றில் விவாதித்து தீர்மானம் எடுக்கப்படும் என் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின்  14ஆவது அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் 3 பிரேரணையினை கொண்டு வந்தார். அதற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். அத்துடன் குறித்த பிரேரணைகள்
 தொடர்பில் ஆளும்கட்சிக்குள்ளும்  பல விவாதங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து குறித்த பிரேரணைகள் குறித்து விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்து தீர்மானம் எடுக்கலாம் என்ற வேண்டுகோளினை முதலமைச்சர் முன்வைத்தார்.

இதனையடுத்து உறுப்பினர் கொண்டுவந்த 3 பிரேரணையில் 2ஆவது மற்றும் 3அவது பிரேரணைகள் உறுப்பினரால்  மீளப்பெறப்பட்டு முதலாவது பிரேரணை தொடர்பில் விசேட கூட்டம் கூட்டப்பட்டு முடிவு எடுப்பதாக சபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்ரெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை குறித்த விடயம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக