அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனமான யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று விசாரணை நடத்தவுள்ளது.யு.எஸ்.எயிட் நிறுவனம் நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
உள்நாட்டு தேர்தல்கள் தொடர்பில் வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இது நாட்டின் உள்விவகாரங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
நாட்டின் தேர்தல் முறைமைக்கு சவால் விடுக்கும் வகையில் யு.எஸ்.எயிட் நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை பிரசுரித்துள்ளது.
மேற்குலக நாடுகள் பணம் செலவிட்டு நாடுகளின் இறைமையில் குறுக்கீடு செய்கின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக