இந்துருவ பண்டாரிகொட ஸ்ரீ சுனந்தாராம விகாரையின் விகாராதிபதி மீகட்டுவத்தே சுமித்த தேரரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
15 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை கடத்திச் சென்று கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
15 வயது மகனை காணவில்லை என பிள்ளையின் பெற்றோர் கடந்த 29ம் திகதி கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
காய்க்காவல என்னும் பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து தம்மை இரண்டு தடவைகள் பாலியல் ரீதியாக விகாராதிபதி துன்புறுத்தினார் என பாடசாலை மாணவர் தெரிவித்துள்ளார்.
துன்புறுத்தியதன் பின்னர் ஹபக்வல பிரதான வீதிக்கு அருகாமையில் தம்மை போட்டுவிட்டு சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்தமை, பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த சுமித்த தேரர் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, தற்போது சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக