திங்கள், 7 ஜூலை, 2014

நாட்டிற்குற்குள் எந்தவொரு உதவாக்கரையையும் அனுமதிக்கப் போவதில்லை உயர்கல்வி அமைச்சர்...!!

நாட்டிற்குள் எந்தவொரு உதவாக்கரையையும் அனுமதிக்கப் போவதில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊவா பரணகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

பராக் ஒபாமா எங்களுக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளார்.

எனினும், இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு நாட்டிற்குள் எந்தவொரு உதவாக்கரையையும் அனுமதிக்கப் போவதில்லை. நாடாளுமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு எதிராக நல்லதொரு அறிக்கையை தயாரிப்பார்கள்.

இலங்கைக்கு எதிராக இன்ன இன்னது செய்ய வேண்டுமெனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏனைய நிறுவனங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.



இந்த தீர்மானங்கள் பாதுகாப்பு சபைக்கும் சமர்ப்பிக்கப்படும்.

பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஸ்யாவும் அங்கம் வகிக்கின்றன. ரஸ்யாவும் சீனாவும் எமக்கு ஆதரவளிக்கும் என கருதுகின்றேன். இதனால் தீர்மானத்திற்கு எதிராக ரஸ்யா அல்லது சீனா வாக்களிக்கும்.

அவ்வாறு வாக்களித்தால் விசாரணை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் ஆசன வாயிலில் சொருகிக்கொள்வதனை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு  இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மக்கள் முன்னிலையில் பகிரங்க மேடையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக