(பூர்வீகம் செய்திகளுக்காக, தர்மபுரத்திலிருந்து KMR)
மருத நிலச் சோலையாய், கவின் பெற விளங்கும் தர்மபுரத்தில் 55 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட மத்திய கல்லூரியில் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் களமாகவும், அவர்களின் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் மலராகவும் ''கலைச்சோலை'' எனும் சஞ்சிகை 07/07/2014 அன்று வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.
இவ் நிகழ்வானது தர்மபுரம் கல்லூரியின் பழைய மாணவனும், அதிபருமாகிய திரு ச.பூலோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக இக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், தற்போதைய வட மாகாண சபையின் கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக வலயக்கல்விப்பணிப்பாளர் திரு க.முருகவேல், கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு வி.இராசகுலசிங்கம் அவர்களும் கலந்து நிகழ்வுதனை சிறப்பித்தனர்.
நூல் வெளியீட்டு உரையினை கல்லூரியின் பழைய மாணவன் மாணிக்கம் ஜெகன் வழங்க, நூல் ஆய்வுரையினை கல்லூரியின் பழைய மாணவனும் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பிரதி பணிப்பாளருமான திரு ஆ.கேதீஸ்வரன் அவர்கள் நெறிப்படுத்தினார். இவ் நிகழ்வில் கல்லூரியின் ஏராளமான பழைய மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக