(பூர்வீகம் செய்திகளுக்காக, தர்மபுரத்திலிருந்து KMR)
இந்தியாவிலிருந்து தேயிலை, இறப்பர் மரங்களுக்கு கீழ் மாசி உண்டு அதனை கிளரி எடுத்து பணக்காரர் ஆகி சுகபோக வாழ்வு வாழலாம் என மலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவழி தமிழரும் 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டு வந்த தமிழ் உறவுகளை முதலில் 618 ஏக்கரில் குடியேற்றிய கிராமங்களில் தர்மபுரமும் ஒன்று. அரசினால் குடியேற்றப்பட்ட மக்களுக்கு இதுவரை காணி அனுமதி பத்திரம் வழங்கப்படாததும், குடி நீருக்கான வசதிகள் இதுவரை எந்த அரசியல் வாதிகளோ அல்லது அரசோ ஏமாற்றி வருவது தொடர்கிறது.
இதில் இரண்டு முக்கிய விடயங்களை நாம் கருத்தில் எடுப்போமாயின்,
01) கிளிநொச்சி மாவட்டத்தில் அநேகமான புதிய அரச நியமனங்கள் பெறும் இளைஞர் யுவதிகள் தர்மபுரம் பகுதியை சார்ந்தவர்கள், அத்துடன் அரசியல் வாதிகளும் அங்கிருந்துதான் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
02) யாழ்ப்பாணத்துக்கு குடி நீர் திட்டத்தை கொண்டு செல்ல விரும்பும் அரசியல் வாதிகளே, இன்னும் எமது கிராமங்களான பாரதிபுரம், விவேகானந்தபுரம், சாந்திபுரம், கரைவெட்டித்திடல், உமையாள்புரம் போன்ற பகுதிகளுக்கு இதுவரை குடி நீர் திட்டம் தொடர்பாக யாரும் முயற்சி எடுக்கவில்லை, அதனை விடுத்து யாழ் வரை குடி நீர் திட்டம் கொண்டுசெல்ல பயங்கர அரசியல் போர் நடைபெறுகிறது, அரசியல் வாதிகளே முதலில் எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தர முயலுங்கள். இன்றுவரை கல்மடு குளந்தினால் வருடாவருடம் பாரிய வெள்ள அனர்த்தத்தை சந்திப்பது எமது தர்மபுரம் கிராமம் தான் என்பதுவும் யாவரும் அறிந்தது.
இந்திய அகதி முகாம்களில் வாழும் எமது ஈழத்து அகதிகளின் காணிகளை அண்மைக்கால இடப்பெயர்வுகளின் பின் பலர் அக்காணிகளை வைத்து தாம் மோசடியில் ஈடுபடுவது மக்களின் குரல் மூலம் தெரிய வருகிறது. எனினும் உறுதிப்பத்திரம் வழங்கப்படாத இக் காணிகளுக்கு கடந்த 07.07.2014 திங்கட்கிழமை காணிக்கிளை அதிகாரி நல்லதொரு முயற்சியாக அதனை வழங்குவதற்காய் தரவுகளை ஊர் மர நிழலில் இருந்து சேகரித்தமை எமது கண்கூடாய் பார்க்க கூடியதாக இருந்தது. இவ் திட்டம் இன்றும்(09/07) நாளையும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன், இவ் நடவடிக்கையை மக்கள் பிரதிநிதியான செல்வம் என்பவர் ஒழுங்கமைத்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக