புத்தளம் நகரில் அமைந்துள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இனந்தெரியாத நபர்கள் இன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவற்றில் ஒரு வர்த்தக நிலையத்தில் இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்படும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் இரண்டாம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு பல்பொருள் வர்த்தக நிலையங்களும், சிறிய கடையொன்றுமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இப்பகுதியில் நடமாடிய காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் பணத்தையே கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக