வெள்ளி, 4 ஜூலை, 2014

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய மருத்துவ பீடம் உயர்கல்வி அமைச்சர் தகவல் யாழ்.பல்கலையில் 3 கட்டடங்கள் திறப்பு...!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிதாக மருத்துவபீடம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.
கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எவர் என்ன கூறினாலும் இலங்கையின் இரண்டாவது தனியார் மருத்துவக் கல்லூரி கண்டியில் ஆரம்பிக்கப்படும்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடமும், பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ பீடமும் பெற்றுக்கொடுக்கப்படும்.

இதனை தவிர ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு பொறியியல் பீடங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மருத்துவ பீடங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.



யாழ்.பல்கலையில் 3 கட்டடங்கள் திறப்பு

 யாழ். பல்கலையில் பரீட்சை மண்டபங்கள் 3 துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது

கலை, வெளிவாரி பட்டப்படிப்புகள், முகாமைத்துவம் ஆகிய பீடங்களுக்குமான பரீட்சை மண்டபங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக