வெள்ளி, 25 ஜூலை, 2014

விடுதலைப் புலிகளின் பாதிப்பை மறப்போம்- ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்: ஜனாதிபதி!!

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தனிப்பட்டவர்களின் நோக்கங்களுக்காக இடம்பெற்றவை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் ஒன்றில் தீவிரவாத குழுக்களால் அல்லது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற இஸ்லாமிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

நாட்டு மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கென்று தனியான கலாசாரம் இருக்கிறது. அதனை பாதுகாக்க
வேண்டும். விடுதலைப்புலிகளால் நாடு பாதிக்கப்பட்டது.

அதனை மறக்க வேண்டும். அவ்வாறான நிலை மீண்டும் உருவாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்- ஜனாதிபதி

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரியவருகிறது.

ஊவா மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.வி.பியின் கடந்த கால செயற்பாடுகளின் அடிப்படையில் அந்த கட்சியை விமர்சிக்க வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் டிலான் பெரேரா, ஜே.வி.பியினர் 1988-89 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட கொலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவதன் மூலம் மக்கள் மத்தியில் ஜே.வி.பி மீது வெறுப்பை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.

இப்படியான விமர்சனங்களை முன்வைத்தால், முன்னர் ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினராக இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அன்றைய செயற்பாடுகள் தொடர்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என ஜனாதிபதி கூறியுள்ளதுடன் அப்படியான விமர்சனங்களை செயய வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.


- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRZLcjrz.html#sthash.pke8BcSh.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக