சாரதியை கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
யாழ்.குடாநாட்டிலிருந்து 16 ஊடகவியலாளர்கள் கொழு ம்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்காக (வெள்ளிக்கிழமை) மாலை யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு சென்றிருந்தனர்.
இந்நிலையில் யாழ்.நகரப் பகுதியிலி ருந்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு 7மணியளவில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆனையிறவில் மறிக்கப்பட்டபோது வாகனத்தை நிறுத்தவில்லை. எதற்காக நிறுத்தாமல் சென்றீர்கள் என வினவியுள்ளதுடன் வாகனத்தை சோதனையிடவும் முயன்றுள்ளனர். ஆனால் ஆனையிறவில் வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டு பல மாதங்களாகின்றன.
மேலும் தாங்கள் பயணித்த வாகனத்தை அவ்வாறு வழிமறிக்கவில்லை. எனவும் ஊடக வியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குச் சென்றபோது அங்கே சிவில் உடையில் இரு பொலிஸாரும் 3படையினரும் வாகனத்தை சோதனையிடப் போவதாக கூறியுள்ளனர்(இந்தச் சோதனைச் சாவடியில் சிவில் உடையில் பொலிஸார் நிற்பதில்லை)
அவர்கள் சோதனையிட முயன்றபோது படைச் சிப்பாய் ஒருவர் வாகனத்தின் சாரதி ஆசனத்திற்கு கீழ் ஏதோ ஒன்றினை போட்டதை ஊடகவியலாளர் ஒருவர் பார்த்துள்ளார். அதனை என்ன? என பார்ப்பதற்கு முன்னர் அங்கே நின்ற பொலிஸார் சாரதி ஆசனத்திற்கு கீழ் இருந்து ஒரு சிகரட் பெட்டியை எடுத்து அதனுள் கஞ்சா இருப்பதாக கூறி வாகனத்தையும் ஊடகவியலாளர்களையும் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
பின்னர் ஊடகவியலாளர்கள் தாம் ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திய பின்னர் சாரதியை தாம் கைது செய்யப் போவதாகவும் ஊடகவியலாளர்களை அங்கிருந்து செல்லுமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலை யில் சாரதி கைதுசெய்யப்பட்டால் படைச்சிப்பாய் கஞ்சாவை வாகனத்திற்குள் கொண்டுவந்து வைத்தமையினை நாம் நீதிமன்றில் கூறுவோம் என ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் அங்கே சோதனையிட்ட படைச்சிப்பாயை தற்போது விசாரணைக்குட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக