வவுனியா தோணிக்கல் திருவருள்மிகு ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடிப்பூர திருவிழாவும் நாக சதுர்த்தி நிகழ்வும் (30.07) புதன்கிழமை அன்று நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
காலை 10.00 மணியளவில் அண்ணா வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அதிசய விநாயக பெருமானின் ஆலயத்தில் இருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு பால், அறுகு சாற்றி அபிஷேகம் இடம்பெறும்.
அதனைத்தொடர்ந்து மகேஸ் வர பூஜை வைபவம் நடைபெறும். மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ அதிசய விநாயக பெருமானின் ஆலயத்தில் இருந்து சீர் வரிசை எடுத்து வரப்பட்டு அம்பிகையின்
ருது சோபன சாந்தி விழாவான ஆடிப்பூர நிகழ்வும் நடைபெறும்.
அதனை தொடர்ந்து நாகசதுர்த்தி நிகழ்வையொட்டி ஸ்ரீ நாகம்மாளுக்கு விசேட பூஜை வைபவம் இனிதே இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக