திங்கள், 28 ஜூலை, 2014

கூவாதே கூடுகட்டு கவிதை நூல் வெளியீட்டு விழா.!!(முழுமையான படங்கள் இணைப்பு)

கவிஞர் மாணிக்கம் ஜெகனின் கூவாதே கூடுகட்டு கவிதை நூல் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் தமிழ்மணி அகளங்கள் தலைமையில் ஞாயிறு மாலை இடம்பெற்றது.

கவிஞர் மாணிக்கம் ஜெகனின் உள்ளக்கிடக்கைகளை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் சமூகத்துடன் இணைந்ததாக இக் கவிதைத் தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இதன் முதல் பிரதியினை வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் வன்னி மாவட்ட அமைப்பாளருமாகிய பவன், வவுனியா முன்னாள் நகரசபைத் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான சந்திரகுலசிங்கம், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக