யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வியாபார கற்கைகள் பீடத்தின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கள் கிழமை காலை இடம்பற்ற இச் சம்பவம் தொடர்பில மேலும் தெரியவருவதாவது,
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும் கடந்த ஒரு சில மாதங்களாக இருந்து வந்த கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்ற மாணவி ஓருவர் உட்பட நான்கு மாணவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பி வசந்த விக்கிரமசிங்க தலைமையிலான பொலிசார் மாணவர்களிடையே சமரசத்தை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக