வெள்ளி, 18 ஜூலை, 2014

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியின் சமூக ஆர்வலரால் பொதுத் தேவைக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு!!!(படங்கள் இணைப்பு)

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட  மன்னாகண்டல் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு நல்லதம்பி ஜனகன் என்பவரினால் தனது சொந்த காணியினை சமூக தேவைகளுக்கும், பொது மக்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளதாக எமது புதுக்குடியிருப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உறுதி காணிகள் இன்மையால், இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் இருந்த மன்னாகண்டல் பகுதியைச் சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கு 8 பரப்புகள் வீதமும், பால்ச் சபைக்கான நிலப்பரப்பும், விளையாட்டு கழகத்திற்கான மைதானம் என்பவற்றிற்கான மொத்தமாக 7 ஏக்கர் நிலப்பரப்பு காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.


திரு ந.ஜனகன் என்பவரின் சமூக சேவையினை எமது பூர்வீகம் இணையம் பாராட்டுவதுடன், அவரின் பணி தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக